Categories
தேசிய செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் வரை…. கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு…. கடும் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது அறிவிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்தது. அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவர்களுக்கும் தற்போது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கழகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யக் கூடாது. பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் இணைய வசதி வழங்க வேண்டும். உத்தரவை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

Categories

Tech |