பிரிட்டன் இளவரச சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி இருவரும் குறுந்செய்தி மூலம் உரையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டியில் அரச குடும்பம் இனவெறி உடையது என்றார். மேலும் இவரின் மனைவி மேகன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் என்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டினார்கள். எனவே சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரி இனிமேல் ஒன்றாக இணைய மாட்டார்கள் என்று கருதப்பட்டது.
மேலும் இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பேசிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டன் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சிக்கு பின்பு வில்லியம் மற்றும் ஹரி இருவரும் குறுஞ்செய்தி மூலமாக உரையாடுவதாக தகவல் வெளியானது.
மேலும் இருவரும் நேரில் சந்தித்து பேசிக்கொள்ளவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் இளவரசி டயானாவின் உருவச் சிலையை திறக்கும் விழா கென்சிங்டன் அரண்மனையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தான் நிச்சயம் கலந்துகொள்ள போவதாக ஹரி உறுதியளித்துள்ளார்.
இருப்பினும் இளவரசர் வில்லியமும் இதில் கலந்துகொண்டு, இருவரும் பேசிக் கொள்வார்களா? என்பது தெரியவில்லை. எனினும் வில்லியம் தன் சகோதரரிடம் தான் பேச விரும்புவதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையை இருவரும் சுமூகமாக இணைவார்களா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.