இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் தாயாக வேண்டும் என மிகுந்த ஆசையுடன் இருந்துள்ளார். அவர் ஆசைப்படி அவருக்கு இரட்டை குழந்தைகளாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கொரோனா தோற்றால் அந்த இளம் தாய் உயிரிழந்தார். மிகவும் மோசமான ப்ளூ அறிகுறியால் பாதிக்கப்பட்ட லரிஸ்ஸா என்ற அந்தப் பெண் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது ஜூன் 12 ஆம் தேதி தெரியவந்தது. அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது
இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். இரண்டாவது குழந்தை பிறந்ததும் அதற்கு சில பிரச்சனைகள் இருந்துள்ளது. எனவே குழந்தைகளை கவனித்துக் கொள்ள அந்த பெண்ணின்கணவர் குழந்தைகள் வார்டுக்கு சென்ற சமயம் அவசரமாக ஓடி வந்த மருத்துவர் உங்கள் மனைவிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி விட்டது உயி பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் போராடியும் அந்த பெண் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தொற்று ஏற்பட்டிருந்தால் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் டியாகோ கூறுகையில், “எனக்கு மனவலிமையை கொடுக்க இரண்டு குழந்தைகளை நான் பார்த்துக் கொள்ளும்படி செய்துவிட்டு கடவுள் ஏன் மனைவியை அழைத்துக்கொண்டார்” என கூறியுள்ளார். இப்பொது டியாகோ குழந்தைகளுடன் மருத்துவமனையில் தங்கி உள்ளார். இதுவரை பிரேசிலில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் உயிரிழந்த நிலையில் கொடிய நோயான கொரோனா இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.