திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெபஸ்டிய ராஜ் கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார். இதற்காக மூன்றாம் நாள் துக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசைவ உணவை அருந்தியுள்ளனர்.
அப்போது 40 பேருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.