Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இரட்டிப்பு கொண்டாட்டத்தில் காஜல்”…. வாழ்த்து சொன்ன ரசிக்காஸ்….!!!!

காஜலுக்கு இரண்டு விஷயத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் கருவுற்றிருந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின் அன்னையர் தினத்தன்று முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார்.

திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மகன் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வர வேண்டும் என கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு வந்த முதல் தந்தையர் தினமான நேற்று காஜல்அகர்வாலின் ரசிகர்கள் அவரின் கணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். மேலும் காஜலின் பிறந்தநாளும் கூட. இதனால் காஜலின் பிறந்த நாள் மற்றும் தந்தையர் தினம் என இரண்டு விஷயத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Categories

Tech |