சட்டசபை தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டு உடன்பாடு கையெழுத்தானது. பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக, தமாகா ஆகியவை இன்று மாலையோ அல்லது நாளையோ கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மேலும் பல வளரும் கட்சிகளுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கொடுப்பது என அதிமுக முடிவு செய்திருக்கிறது அதன்படி,ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார்கள்.