சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவில் உள்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்கதேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கோரி பிஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு 25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அல்ல மேலும் ரூ.25 ஆயிரம் கூடுதல் அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேல் முறையீடு வழக்கையும் தள்ளுபடி செய்து 50,000 அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தது.
Categories