உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் சூப்பர் டெக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் சூப்பர் டெக் எமரால்ஸ் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் அபெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள 334 அடி உயரமுள்ள 32 மாடிகள் உடைய கட்டிடமும், சியேன் என பெயரிடப்பட்டிருக்கின்ற 318 அடி உயரமுள்ள 29 மாடிகள் உடைய கட்டிடமும் முறையான அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த கட்டிடங்களில் 21 கடைகளும் 915 குடியிருப்புகளும் கட்டப்பட்டு இருந்தது. இந்த சூழலில் இது தொடர்பாக அந்த குடியிருப்பு வளாகத்தில் இருப்போர் தொடர்ந்து வழக்கு விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இரண்டு கட்டிடங்களையும் இடிக்கும் படி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஏ டிபைஸ் இன்ஜினியரிங் எனும் நிறுவனம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஜெட் டெமாலிசன் நிறுவனத்தின் உதவியுடன் வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3,700 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தி வெறும் ஒன்பது நொடிகளில் கட்டிடம் இடிக்கப்பட்டு இருக்கின்றது. சீட்டுக்கட்டு போல் சரியும் காட்சிகளை பலரும் பார்த்து ரசித்திருக்கின்றனர் இது ஒரு புறம் இருக்க வெடிபொருட்களை வெடிக்க செய்யும் பட்டனை அழுத்தியவரோ கட்டிடம் இடிந்தது பற்றி கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்துள்ளனர். அதாவது பட்டன் அழுத்திய சேட்டன் தாத்தா கூறும் போது வெடிக்கச் செய்யும்போது கட்டிடத்தில் இருந்து நான் எழுவது மீட்டர் தொலைவில் இருந்தேன். கட்டிடம் தகர்ப்பு நூறு சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது ஆனால் வெடிப்பிற்கு பின் நானும் எனது குழுவினரும் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும் சில நிமிடங்களுக்கு பின் அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதோம் என தெரிவித்துள்ளார்.