Categories
தேசிய செய்திகள்

இரட்டை கோபுரம்: மீண்டும் கட்டுவோம்…. சூப்பர் டெக் நிறுவன தலைவர் விருப்பம்….!!!!

இரட்டை  கோபுர கட்டிடம் இடிக்கப்பட  இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்ட விரும்புவதாக நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் “சூப்பர்டெக்” கட்டுமான நிறுவனம்   500 கோடி ரூபாய் மதிப்பில் இரட்டை கோபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி அந்த  கட்டிடத்தை 3 ஆயிரத்து 700 கிலோ வெடி பொருட்களை பயன்படுத்தி சில நொடிகளில் தரைமட்டம்  ஆக்கப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்த கழிவுகள் அகற்றப்பட்ட பிறகு புதிய வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த விரும்புவதாக சூப்பர்டெக் கட்டுமான நிறுவனத் தலைவர் ஆர். கே. ஆரோரா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. எங்கள் நிறுவனத்துக்கு நொய்டாவில் குழும வீட்டு வசதி திட்டங்களுக்காக 14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் 2  ஏக்கர் நிலத்தில் நாங்கள் இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் கட்டினோம். அவை இடிக்கப்பட்ட நிலையில். அந்த 2  ஏக்கர் நிலத்தில் புதிய வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறோம். இதற்காக நாங்கள் நொய்டா  மேம்பாட்டு ஆணையத்திடம் எங்களது திட்டத்தை சமர்பிப்போம்.

மேலும் தேவைப்பட்டால் குடியிருப்போர் நல சங்கங்களின் ஒப்புதலையும் பெறுவோம். அதற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் நாங்கள் அந்த நிலத்தை வாங்க செலவழித்த பணத்தை திரும்ப கேட்போம். இந்நிலையில் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தால் எங்களுக்கு நஷ்டம் தான். ஆனால் அது எதிரொலிக்காது. நாங்கள் ஏற்கனவே 70 ஆயிரம் வீடுகளை கட்டி ஒப்படைத்துள்ளோம். மேலும் அடுத்த 2  ஆண்டுகளில் மட்டும் 20 ஆயிரம் வீடுகளை கட்டி ஒப்படைக்க உறுதிமொழி எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டிடம்  கட்டுவதற்கு அந்த வளாக குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |