Categories
மாநில செய்திகள்

இரட்டை பணி முறை அமல்….. போக்குவரத்து ஊழியர்கள் அச்சம்…. போராட்டத்தில் தொழிலாளர்கள்….!!!

தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இரட்டை பணி முறை அமல்படுத்துவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய தொற்று காரணமாக நோய் பரவல் தீவிரமடைந்தது. இதனால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த டிசம்பர் 24ஆம் தேதியும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த மாதம் 14ஆம் தேதியும் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

தற்போது அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், இடைக்கால நிவாரணம் வழங்க கோரியும் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும், ஊழியர்கள் பற்றாக்குறையால் இரட்டைப்பணி முறையை ஈடுபடுத்தும் போக்கை கைவிட வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |