மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார்.
அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பிங்கி, ரிங்கி சகோதரிகள் வசித்து வரக்கூடிய அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் அதுல். ஒரே ஏரியா என்பதால் பிங்கி, ரிங்கி சகோதரிகளுக்கும், அதுலுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட பிங்கி, ரிங்கியின் தாயாரை அதுல் தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவ்வாறு தாயாரை மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்ல உதவிய அதுல் மீது சகோதரிகள் பிங்கி, ரிங்கிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. அதன்பின் இறப்புவரை ஒன்றாகவே வாழ வேண்டும் என்று நினைத்த பிங்கி, ரிங்கி தங்களது காதலரான அதுலை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். இதனால் சகோதரிகள் தங்கள் விருப்பம் பற்றி அதுலிடம் தெரிவித்ததும், அவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதனைதொடந்து பெற்றோர் சம்மதத்துடன் அதுலை, பிங்கி மற்றும் ரிங்கி சகோதரிகள் நேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த அதுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, 2-வதாக திருமணம் செய்வது குற்றம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இரண்டு பெண்களின் விருப்பத்தின்பேரில் இத்திருமணம் நடைபெற்றதால் அதுலை தண்டிக்க சட்டத்தில் வழியில்லை எனவும் கூறப்படுகிறது.