Categories
இந்திய சினிமா

“இரட்டை வேடத்தில் களமிறக்கும் ஜெயம் ரவி”…..படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் சகோதரன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இவரது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘ஜேஆர்28’ என அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்  படத்திற்கான தலைப்பு “அகிலன்” என  வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விவேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம்சி .எஸ்  இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |