இரட்டை வேடம் ஏற்றவனிடமே இரட்டைவேடம் போடுகிறீர்களா என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, எந்த அரசாங்கமும் தனிமனிதனை உளவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இரட்டைவேடமேற்று நடித்தவன் நான். அப்படி இரட்டை வேடம் போடுபவர்களை என்னால் எளிதில் கண்டறிய முடியும் என்று கூறியுள்ளார். கொங்குநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் அது அரசியல் கோஷம் எனவும், மக்களின் தேவை கிடையாது எனவும் கூறியுள்ளார்.