Categories
அரசியல்

“இரட்டை வேடம் போடுறாங்க” திருமா பரபரப்பு கருத்து…. ஏற்க மறுக்கும் அதிமுக…!!!

தமிழக முன்னாள் முதல்வர் ஆன அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர், அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி அளிக்காததால் தான் வெளிநடப்பு செய்தோம்.

தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவிற்கு ஆதரவு அளித்தோம். இதற்கிடையில் திருமாவளவன், நீட்தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என்று கூறியிருக்கும் கருத்து ஏற்க முடியாதது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது எதையுமே செய்யவில்லை. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திமுக தற்போது கொண்டுவந்த திட்டத்திற்கு முன்னரே அதிமுக அரசு செயல்படுத்தி விட்டது என்று  கூறினார்.

Categories

Tech |