Categories
மாநில செய்திகள்

“இரட்டை வேஷம்” நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…. கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றல…. ஜிகே வாசன் ஆவேசம்…..!!!

தமிழகத்தில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு பிறகு ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக அரசின் மின்கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கட்சியினர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. நல்லது நடக்கும் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. கடந்த ஆட்சியின் போது திமுக சொத்து வரியை கண்டித்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது சொத்து வரியை பல மடங்கு அதிகரித்துள்ளனர். இரட்டை வேடம் போட்டு கொண்டு சொத்து வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. சொத்து வரி மட்டுமின்றி பால் விலை, குடிநீர், மின்கட்டணம் என அனைத்தையும் ஏற்றியுள்ளது.

மக்கள் மீது நம்பிக்கை இல்லாத அரசாங்கம் என்பதை வெளிப்படையாக உணர்த்தும் வகையில் திமுக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. நீங்கள் எந்த மாடல் பேசினாலும் சரி தமிழக மக்கள் இனி உங்களை நம்ப போவதில்லை. உங்களுடைய சாயம் வெளுத்து விட்டது‌. உங்களுடைய உண்மையான முகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டார்கள். இதற்கான பலன் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு கிடைக்கும். எதிர்மறை வாக்குகளால் பிரதிபலிப்பார்கள் என்பதில் மாற்றம் இல்லை என்று கூறினார் ‌

Categories

Tech |