இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் நீங்கள் பணத்தை சேமித்தால் குறுகிய காலத்தில் உங்களுடைய பணம் இரட்டிப்பாக மாறும்.
சேமித்து வைத்திருக்கும் பணத்தை எங்கேயாவது போட்டு பல மடங்கு லாபத்தை எடுக்கவேண்டும் என்று நிறைய பேர் எண்ணுவார்கள். அதற்கு நிறைய வழிகள் உள்ளது. ஆனால் அது ரிஸ்க் இல்லாத முதலீடாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு தபால் நிலையம் தான் சிறந்த இடம், மத்திய அரசின் ஆதரவோடு செயல்பட்டு வரும் நிறைய சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் உள்ளது. இங்கு சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு வரிச்சலுகை போன்ற நன்மைகளும் உள்ளது.
வாங்கும் சம்பளத்தில் சிறிய தொகையை சேமித்து வைத்தாலே சில காலத்தில் அது பலமடங்கு பெருகி விடும். அவ்வாறு குறுகிய காலத்தில் இரு மடங்கு லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள் மற்றும் அவற்றின் வட்டி விகிதங்கள் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.