முன்னாள் அமைச்சர் முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனியாக கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். ரஜினியுடன் படத்தில் வேண்டுமானால் நடிப்பேன் கட்சியில் இணைய மாட்டேன் என்று கூறிய அவர், தனியாக கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு மதுரையில் போஸ்டர்கள் அதகளப்படுகின்றன. கட்சிச் சின்னம் மற்றும் கொடியும் தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.