லண்டன் நகரத்திற்கு இணையான மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக பிளந்துள்ளது.
பிரம்மாண்டமான ஒரு பனிப்பாறை பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் அண்டார்டிகா பகுதியில் இருந்து பிளந்திருக்கிறது. அதாவது பிரிட்டனின் Halley ஆராய்ச்சி நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிளவு உண்டானது. எனினும் அந்த தளத்தில் மனிதர்கள் இல்லை. எனவே அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும் அண்டார்டிகாவின் மிகப்பெரிதான பனிப்படுக்கையிலிருந்து சுமார் 1270 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மற்றும் 150 மீட்டர் தடிமன் கொண்ட பனிப்பாறை பிளந்திருக்கிறது. இந்த பனிப்பாறையானது லண்டன் பெருநகரத்தின் அளவிற்கு இணையானது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆய்வாளர்கள் இந்த பிளவை ஜிபிஎஸ் மூலம் செயற்கைக்கோளில் இருந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த பனிப்பாறை பிளக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது முழுமையாக பிளந்து இரண்டாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பிரிட்டன் பனிப்பாறை நிபுணர் மற்றும் வேல்ஸில் இருக்கும் Swansea பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான Adrian luckman என்பவர் பனிப்பாறைகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தற்போது உடைந்துள்ள இப்பனிப்பாறை பல பாகங்களாக எப்போது பிளக்கும் என்பது தொடர்பிலும் கணித்து வருவதாக கூறியுள்ளார்.