மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு திருப்புள்ள மாணவிகள் தண்டையார்பேட்டை சென்னை 600081ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் விண்ணப்பத்தை டிசம்பர் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.