கல்வி தொலைக்காட்சி இன்றுடன் தனது ஓராண்டை நிறைவு செய்வதால் முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கூறுகையில், ” ஓராண்டை நிறைவு செய்திருக்கும் கல்வி தொலைக்காட்சி என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கல்வி தொலைக்காட்சி பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி தொலைக்காட்சியை முதல் நாள் பார்க்க தவறியவர்கள், அதற்கு அடுத்த நாள் யூ டியூப் மூலமாக பார்க்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அதனால் பல்வேறு மாணவர்கள் பெரும் பயனடைந்துள்ளனர். கல்வி தொலைக்காட்சியை மிகச் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.