Categories
உலக செய்திகள்

“இரண்டாம் உலக போர்” கௌரவிக்கப்பட்ட வீரர்கள்…. பொறிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் பெயர்…!!

இரண்டாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஆறு வயது சிறுவனும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குயின்குயின் என்று அழைக்கப்படும் மார்சல் எனும் ஆறு வயது சிறுவன் பெயர் Aixe-sur-Vienne என்னும் போர் நினைவிடத்தில் நேற்று பொறிக்கப்பட்டது. பிரான்சில் இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் போர்தளபதியின் மகனான மார்ஷல் அதிக நேரத்தை போர் வீரர்களுடன் செலவிட்டதால் அவர்களது அனைத்து சங்கேத வார்த்தைகளையும் கற்றுக்கொண்ட மார்ஷல் முக்கியமான செய்திகளை தனது சட்டைக்குள் மறைத்து படை வீரர்களிடம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தான். 1944 ஆம் வருடம் நாசி படையிடம் இருந்து பிரான்ஸை விடுவிப்பதற்காக ஏராளமான போர் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

அப்போது மார்ஷல் வழக்கம்போல் செய்தியை எடுத்துக்கொண்டு சென்ற சமயம் எதிர்பாராதவிதமாக இயந்திரத் துப்பாக்கி சூட்டு வாசலின் மார்ஷல் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்து வீரமரணமடைந்து மண்ணில் சாய்ந்தான். ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி பிரான்ஸ் விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு படை வீரர்கள் பலர் சூழ மார்ஷல் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவன் சவப்பெட்டியின் மீது பிரான்ஸ் கொடி சுற்றப்பட்டு தக்க மரியாதையுடன் வீரர்கள் அடக்கம் செய்தனர். அத்தகைய வீரனுக்கு தற்போது நினைவிடத்தில் இரண்டாம் உலகப்போரின் இளம் வயது ஹீரோ என கௌரவத்துடன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |