Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் குத்து திரைப்பட டிரெய்லருக்கு கடும் எதிர்ப்பு …!!

ஆபாச காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இரண்டாம் குத்து திரைப்படத்தின் டிரைலருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரண்டாம் குத்து. இந்த திரைப்படத்தில் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத முன்னோட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சினிமா துறையினரே இது போன்ற காட்சி அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை கண்ணால் பார்க்கவே குசியதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் பார்த்துச் குசி இருக்குமோ எத்தனை வலிர் இளர் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கல்வியை போதிக்கும் இடத்தில், காமத்தை போதிக்க வா முன் வந்தோம் என்றும், பாரதிராஜா வினவியுள்ளார். இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிட கிடைத்த சுதந்திரம் தன்னை பதைபதைக்க வைப்பதாக கூறியுள்ள பாரதிராஜா இத்தனை கற்பழிப்புகள், குழந்தைகள் சிதைவுகள், போதாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |