நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். பரவலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தன்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் தடுப்பூசி எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.