தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிவோருக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது . இதனிடையே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆனது இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக நேர்முக இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சருத் தியாகராய கல்லூரியில், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.
பயிற்சியை தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் காவலர் தேர்வு பயிற்சி தொடர்பான காணொளிகளை youtube மூலமாக வெள்ளிக்கிழமை முதல் பதிவேற்றம் செய்து வருகின்றது. அனைத்து பிரிவுகளிலும் சுமார் 700 காணொளிகள் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது