Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… மீண்டும் தாக்கும் கொரோனா… மிக மோசமான பாதிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் போது ஏற்படும் பாதிப்பே மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு சிலர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது போன்று இரண்டாவது முறை ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு கட்டாயம் மிக மோசமான நிலையில்தான் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

அந்த ஆய்வினை மும்பையில் இருக்கின்ற இரண்டு மருத்துவமனைகளின் ஆராய்ச்சியாளர்கள், மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப சர்வதேச மையம், டெல்லியில் உள்ள சி எஸ் ஐ ஆர் இன்ஸ்டியூட் ஜெனோ மிக்ஸ் அண்ட் ஒன்றிணைந்து ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் வெளியான முடிவுகளில், “ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.

இரண்டாவதாக ஏற்படும் பாதிப்பு மற்றும் மோசமான அறிகுறிகள் அனைத்தும் நீண்ட காலம் நீடித்திருக்கும். மறுமுறை நோய் ஏற்படுவதற்கான பாதிப்பு அரிதானது என்றாலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.அதே சமயத்தில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களும் அவசியமாக இருக்க கூடாது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |