Categories
இந்திய சினிமா

இரண்டாவது கணவருடன் விவாகரத்து… பிரபல நடிகை இன்ஸ்டாகிராமில் பதிவு… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பிரபல முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆபாச பட நடிகையான மியா கலிஃபா கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்தார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ஆம் ஆண்டு பிரிந்ததையடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடனை மியா கலிஃபா இரண்டாவதாக கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் மியா கலிஃபா தங்களது திருமண உறவைத் தக்கவைத்துக் கொள்ள கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எடுத்துக் கொண்டதாகவும், அது பலன் அளிக்காததால் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இருவரும் திருமண உறவை முடித்துக் கொண்டாலும் தங்களது நட்பு எப்போதும் தொடரும் என்று மியா கலிஃபா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |