லாகூரில் நடைபெற்ற இரண்டாம் டி20 தொடரில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
லாகூரில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் விக்கெட் கீப்பரான ரிஸ்வான் அரைசதம் விளாசி 51 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். மற்றோரு புறம் 30 ரன்களுடன் பஹிம் அஸ்ரப் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் அணி கடைசியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாபிரிக்க அணியில் பிரிடோரியஸ் தன் அபாரமான பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா 145 ரன்கள் இலக்குடன் களமிறங்கியுள்ளது. இதில் ரீஸா ஹெண்ரிக்ஸ் மற்றும் வான் பிஜியன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 42 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி இறுதியாக 16.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இதில் 25 ரன்கள் மில்லர் மற்றும் 17 ரன்கள் கிளாசனும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இத்தொடரின் ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்க அணியின் பிரிடோரியஸ் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்கா இதில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் உள்ள தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே வரும் 14ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.