Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில்… இங்கிலாந்தை மிரட்டி வரும் இந்தியா… அலற விட்ட அஸ்வின்…!!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 134 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது. 

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டாம் நாளாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அபாரமாக ஆடிய ரோகித்சர்மா 161 ரன்களை குவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது.

இதில் தமிழக வீரரும் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணியை மிரட்டி வருகிறார். இதன்மூலம் இங்கிலாந்து அணியில் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் உள்ளன. இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோ ரூட் முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசியிருந்தார். இந்த ஆட்டத்தில் அக்சர் படேல் தன் அபார சுழற்பந்து வீச்சின் மூலம் அவரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அதன் பின்பு வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியது. இப்போட்டியில் இந்திய அணி சார்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி பெற்றிருந்ததால் இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

Categories

Tech |