Categories
சினிமா தமிழ் சினிமா

“இரண்டாவது வாரத்தில் தி ஜெலண்ட்”…. சிறப்பான வசூல் பெற்றது…. வெளியான தகவல்…!!!!!!!!

ஜெலண்ட் சரவணன் முதன்முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கின்ற திரைப்படம் ‘தி ஜெலண்ட்’. இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தாலா கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கிறது. மிகுந்த பொருட்களில் மிக பிரம்மாண்டமாக தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28ஆம் தேதி அன்று வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் சிறப்பான வசூலை ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி  இருக்கிறது. இந்த சூழலில் இந்த படம் இரண்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றது. மேலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |