Categories
சினிமா

இரண்டாவது ஹனிமூனா!….. இப்போது எங்கு தெரியுமா?….. பறந்த நயன்-விக்கி….. வைரல் புகைப்படம்….!!!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.. சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரின் திருமணமும் கடந்த 29ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த தம்பதிக்கு பல்வேறு நடிகர்களும் மற்றும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து இருவரும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி, கேரளாவின் திருபுலாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு ஹனிமுனுக்காக தாய்லாந்துக்கு சென்றனர்.

இதற்கிடையில் நயன்தாரா சாப்பிட்ட உணவில் ஒவ்வாமை காரணமாக திடீரென வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இருவரின் புகைப்படத்தை இணைத்துள்ளார். மேலும் “தொடர்ச்சியான பல வேலைகளுக்கு பிறகு இங்கே எங்களுக்காக சிறிது நேரம் எடுத்து இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |