Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கண்காட்சி” தொடங்கி வைத்த முதலமைச்சர்…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

 தமிழக முதலமைச்சர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டு தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு தற்போது விடுமுறை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாவரவியல் பூங்காவில் 124 மலர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை  தமிழக முதலமைச்சர்  பார்வையிட்டு தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை பார்த்து ரசித்தும் , நடைபெற்ற கலைநிகழ்ச்சியையும்  கண்டுகளித்துள்ளனர்.

இதனையடுத்து  கடந்த 21-ஆம் தேதி  12 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் , நேற்று 19 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இந்நிலையில்  முதலமைச்சர் வந்ததால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளது.

Categories

Tech |