Categories
தேசிய செய்திகள்

இரண்டு ஆண்டுகள் தலைமறைவு…. சிறுவனின் செயலால்…. அதிர்ச்சியில் நீதிமன்றம்

14 வயது சிறுவன் ஒருவன் சிறுமியை கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ள வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவர், சிறுமி ஒருவரை கோயிலில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்தின் போது மைனர் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்துள்ளனர். அந்த சிறுமியின் தந்தை அச்சிறுவனுக்கு எதிராக காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது அந்த சிறுவன் இளைஞன் ஆகியுள்ளதால் அவனுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் காவல்துறையிடம் அச்சிறுவன் பிடிபட்ட நிலையில் அவனுக்கும் குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறார்களுக்கு இடையேயான காதல் உணர்வை போக்சோ சட்டத்தின் கீழ் கொண்டுவரத் தேவையில்லை. மேலும் இந்த சட்டத்தின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் மனசாட்சியுடன் போக்சோ சட்டத்தில் இருந்து சிறுவனை விடுவித்துள்ளது. இந்நிலையில் போக்சோ சட்டம் சிறார்களை பாதுகாக்கவே இருக்கின்றது என்றும் அவர்களை தண்டிக்க அல்ல என்றும் கூறியுள்ளது. மேலும் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை முன்னெடுக்கிறது. இந்த வழக்கு குழந்தையின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீதிமன்றம் உணர்கிறது என கூறி குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞனனுக்கு பிணை வழங்கியுள்ளது.

Categories

Tech |