Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு இன்று பிறந்தநாள்… வெளியான கலக்கல் புகைப்படம்… குவியும் வாழ்த்து…!!!

குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவருக்கும் இன்று (மே 7) பிறந்தநாள் .

அஸ்வின் -மணிமேகலை இருவரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் டாம் அண்ட் ஜெர்ரி போல அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது ரசிக்கும் வகையில் இருக்கும். மேலும் இவர்கள் குக் வித் கோமாளி செட்டில் செம காமெடியாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது  அஸ்வின் மற்றும் மணிமேகலைக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் ‌.

Categories

Tech |