இரண்டு சக்கர வாகனத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார் கோவையை சேர்ந்த நண்பர் ஒருவர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.
இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும் போது கோவையை சேர்ந்த நண்பர் ஒருவர் மருத்துவமனைக்கு துரிதமாக செல்லும் வகையில் இரண்டு சக்கர வாகனத்தில் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதைப் பதிவிட்டுள்ள அவரது நண்பர் சேவை மனப்பான்மை உள்ளவன் எப்படியும் செய்தே தீருவான் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.