இரண்டு மகன்களை கொன்ற சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் அயன்பொம்மையாபுரத்தில் வசித்து வருபவர் ஜோதிமுத்து. இவரின் மனைவி உஷாராணி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றான். உஷாராணியின் தங்கை மகாலட்சுமி. இவர் தனது அக்காவின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது அங்கு இருக்கும் ஜோதி முத்துவின் தம்பியான ரத்தினராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது.
சென்ற 2010ஆம் வருடம் ரத்தினராஜ் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். இதை அறிந்து ஜோதிமுத்து அங்கு சென்று அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்துவந்தார். பின் ஜோதிமுத்து மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்போது எட்வின் ஜோசப் என்கின்ற மகன் இருக்கின்றார்.
திருமணத்துக்கு பின்னரும் மகாலட்சுமியும் ரத்தினராஜூம் பழகி வந்திருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் தனியாக இருப்பதை மகன் அல்போன்ஸ் பார்த்து ஜோதி முத்துவிடம் கூறியிருக்கின்றார். இதனால் வீட்டில் இருப்பவர்கள் இரத்தினராஜை கண்டித்திருக்கின்றார்கள். அதன்பின் ரத்தினராஜ் மகாலட்சுமியிடம் பேசுவதில்லை. சென்ற மார்ச் 22ஆம் தேதி 2020 ஆம் வருடம் ரத்தினராஜ் ஜோதிமுத்துவின் இரண்டு மகன்களையும் ஊருக்கு தெற்கு பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்று இருக்கின்றார்.
அங்கே கிணற்றில் இருவரையும் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரத்தினராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் இந்த தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கவும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும் ரூபாய் 200 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.