நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் குணசேகரன் கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை எடுத்துக்கொண்டார். 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இவர் தனது இரண்டு டோஸ்களையும் எடுத்த நிலையில் விரைவில் ஜப்பான் செல்ல இருக்கிறார்.