கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான cowin இணையதளம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் நேற்று புதிதாக 9 மொழிகளில் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ் வழியில் அந்த இணையதளத்தை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
எனவே உடனே சரிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துமாறு சுகாதாரத் துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.