செங்கல்பட்டு மாவட்டத்தில் நிச்சயதார்த்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 40 பேர் தனியார் பேருந்து ஒன்றில் கல்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு நிச்சயதார்த்த விழாவிற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது வேப்பஞ்சேரி கிராம வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 20 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து விபத்தில் இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.