எந்தவொரு ஆளுநருக்கும் இல்லாத விதமாக தற்போதைய தமிழக ஆளுநர் ரவிக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் சென்ற இடங்களில் கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர் சனாதனவும், மதமும் வேறுவேறு சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி உரையாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். சட்டத்தில் கூறப்பட்ட மதசார்பின்மை வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் சதாதனத்தையும், மதத்தையும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது எனவும் அதனை ஒப்பிட்டு பார்க்க கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார்.