அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் இரத்தம் வழிய வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் வசிக்கும் Andrea Sanchez என்ற 12 வயதுடைய சிறுமி அவர் வீட்டிலிருந்து ரத்தம் வழிய ஓடி வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அச்சிறுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து Andreaவிடம் என்ன நடந்தது? என்று விசாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அச்சிறுமியின் பெற்றோர் Ruben Sanchez(51), Ana Guerra(49) மற்றும் சகோதரி Amy sanchez(19) ஆகிய மூவரும் ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அதாவது சிறுமியின் பெற்றோர்கள் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர். எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டு கொண்டு அவர்களே தற்கொலை செய்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
மேலும் இவர்களை சுட்ட நபர் யார்? என்று தெரியாத நிலையில் Andrea நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அனைத்தையும் மறந்துவிட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எனினும் தற்போது அவர் துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தையே மறந்துவிட்டார். இதனால் இக்கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.