ஒரு நடிகையின் சர்ச்சை பேச்சுக்கு பிரபல நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபல நடிகர் பார்த்திபன் ஒரே சாட்டில் இயக்கி நடித்துள்ள படம் இரவின் நிழல். கடந்த 15-ஆம் தேதி இரவு நிழல் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிரகிடா நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த படம் தொடர்பாக சமீபத்தில் நடிகை பிரகிடா செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அவர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அனைத்து படங்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கக் கூடாதுதான் என்றாலும், தனி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாம் சேரிக்கு போனால் அங்கு பொதுவாக கெட்ட வார்த்தைகளை மட்டும் தான் கேட்க முடியும். அது மக்களுக்கும் நன்றாக தெரியும். எனவே சினிமாவுக்காக அந்த சூழ்நிலைகளை மாற்ற முடியாது எனக் கூறியிருந்தார். இந்த பேச்சுக்கு தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதாவது பிரகிடா கூறிய சேரி என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நடிகை பிரகிடா மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், தற்போது பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகை பிரகிடாவின் பேச்சுக்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும், சேரி மக்களிடம் தற்போது நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் கூறியது தவறுதான் எனவும், கடந்த 1989-ம் ஆண்டில் நடக்கும் படம் எனவும், என்னுடைய படங்களில் சேரி மக்கள்தான் எப்போதும் ஹீரோ எனவும் கூறியுள்ளார்.