Categories
உலக செய்திகள்

இரவில் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த சிறுமி ..மருத்துவமனையில் அனுமதி ..!!சிறுமியின் நிலை என்ன ?

லண்டனில் 12 வயது சிறுமி உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரவில் கீழே விழுந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

கிழக்கு லண்டனின் ஹகர்ஸ்டனில் கடந்த 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் உயரமான அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 12 வயது சிறுமி தவறிக் கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், அவசர உதவி குழுவினரும் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பிறகு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார் .

சிறுமிக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றும் ,இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான சந்தேகமும்  இல்லை என்றும்  போலீசார்கள்  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |