இரவில் இதை குடித்து வருவதால் உடலில் இருக்கும் சளி அனைத்தும் காலையில் மலம் வழியாக வேறிவிடும்..!
இருமல், சளி, சிகரெட் பிடிப்பவர்கள் லொக்கு லொக்கு என்று இருமி கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி உள்ளவர்களுக்கு சளி கட்டி கட்டியாக வெளியேறும். சிகரெட் பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு சளித்தொல்லை அதிகமாக இருக்கும். அதை ரொம்ப எளிமையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து ஒரு கசாயம் செய்யலாம்.
குழந்தைகளுக்கு கால் டம்ளர் அளவு கொடுப்பதே நல்லது. எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்றால் இரவு தூங்குவதற்கு முன்னாடி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் கொடுக்க வேண்டாம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 2 டம்ளர்
ஏலக்காய் – 2
மிளகு – 12
இஞ்சி – ஒரு சின்ன துண்டு
கிராம்பு – 1
பங்கற்கண்டு – உள்ளங்கை அளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உள்ளங்கை அளவிற்கு பணக்கற்கண்டு எடுத்துக் போடுங்கள், கிராம்பு ஒன்று எடுத்து எடுத்து அதையும் சேருங்கள், அதோடு இஞ்சி ஒரு சின்ன துண்டு அளவிற்கு எடுத்துக் தோல் சீவி அதை நச்சு எடுத்துக் கொண்டு அதையும் அந்த தண்ணீரில் போடுங்கள். இஞ்சி தொண்டை கரகரப்பு நீக்கும், செரிமான சக்தியை அதிகரிக்கும். ஏலக்காய்-2, 12 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பொடியாக்கிய பின்னர் இதையும் அதோடு சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது அணைத்து பொருட்களும் தண்ணீரோடு சேர்த்து கொதித்து வரும்,இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக வற்ற வைத்து கொள்ளுங்கள். வற்றியதும் அதை எடுத்து ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இதை முக்கியமாக இரவில் தூங்குவதற்கு முன்பு குடித்தால் ரொம்பவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள சளி அனைத்தையும் நீக்கி விடும்