பிரிட்டனை சேர்ந்த நபர் கொரோனா விதியை மீறி தன் காதலியை சந்தித்ததால் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டவர்கள் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை மற்றும் 10000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த Nigel Skea என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh ஐ சந்திக்க சென்றபோது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அப்போது ஹோட்டலுக்கு சென்றவுடன் தன் காதலிக்கு தான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஹோட்டலில் விவரங்கள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதன்பின்பு Agatha அதே ஹோட்டலில் 27வது தளத்தில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து Nigel யாரும் இல்லாத சமயத்தில் தன் அறையில் இருந்து 13 தளங்கள் மேல் இருக்கும் தன் காதலியின் அறைக்கு சென்றிருக்கிறார்.
அதன்பின்பு அவருடன் தங்கிவிட்டு மறுநாள் காலையில் அந்த அறையிலிருந்து வெளியேறிய போது அவரை பாதுகாவலர் பார்த்துவிட்டார்கள். இதனைத்தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனால் Nigel ற்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் டாலர்கள் அபராதமும் Agatha விற்கு ஒரு வார சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனால் Nigel மற்றும் Agatha தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், Nigel தன் காதலை வெளிப்படுத்துவதற்காக தான் லண்டனிலிருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்ததால் உணர்ச்சிவசப்பட்டு சந்தித்ததாக வாதாடினர். எனினும் கொரோனா தீவிரத்தை குறைப்பது, இரண்டு காதலர்கள் சந்திப்பதை விட மிக முக்கியம் என்று கூறிய நீதிபதி, தற்போது இருக்கும் ஆபத்தான காலகட்டத்தில் உறவுகளுக்கு இடையில் இடையூறுகள் வருவது சகஜம்தான் என்று கூறிவிட்டார்.