Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் சத்தம்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

இந்து மகா சபை நிர்வாகியின் கார் மீது மர்மநபர்கள் பெட்ரொல் குண்டை வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பண்ணிமடை ஆண்டாள் அவென்யூ  பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில பாரத  இந்து மகா சபாவில் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் வீட்டில் இரவு 11 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுபாஷின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது  வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்  மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை  வீசி சென்றது  தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காரில் பற்றி எரிந்த  தீயை உடனடியாக அணைத்து விட்டனர். இதுகுறித்து  சுபாஷ் தடாகம் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  சுபாஷின்  வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது  இரண்டு மர்ம நபர்கள் சுபாஷின் காரின் மீது பெட்ரோல் குண்டை  வீசி செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |