அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இரு நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கற்களை வீசி உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சென்ற 2 மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.