Categories
லைப் ஸ்டைல்

இரவில் செல்போன் யூஸ் பண்றீங்களா… அப்போ இதை கட்டாயம் படிங்க… எச்சரிக்கை…!!!

இரவு நேரங்களில் அதிக அளவு செல்போன் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இப்பொழுதெல்லாம் மொபைல் போன் இல்லாமல் தூங்குவது கூட கிடையாது. படுக்கச் செல்லும் போது கூட மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். இரவில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் இப்படி கொஞ்சமும் ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற இயலாது. மொபைல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். இது உங்கள் பார்வையை மட்டுமல்ல, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், இரவு நேரங்களில் மொபைல் பார்ப்பதால் எந்த மாதிரியான ஆபத்துகள் உண்டாகின்றன, என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தொடர்ந்து இரவு நேரங்களில் மொபைல் போன் பார்ப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டது. இது கண்களில் வெகு நேரம் படும் போது கண்களில் உள்ள ரெட்டினா பகுதியை பாதிப்படையச் செய்கிறது. தூங்க வேண்டிய சமயத்தில் தூங்காமல் மொபைலை பார்ப்பது போதிய தூக்கம் இருக்காது. இதனால் பகல் நேரங்களில் சோர்வு, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சில வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடைய மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுவதால், செல்போன்கள் மனிதர்களுக்கு புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சுகள் மூளையை பாதிக்கின்றன.
இருட்டான அறையில் அல்லது இருட்டான சுற்றுப் புறங்களில் மொபைல் போனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் நீல நிற ஒளி உங்கள் கண்களுக்கு வலியையும் சோர்வையும் கொடுக்கிறது. இதுவே நீங்கள் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தால் சீக்கிரமே கண் பார்வையில் நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் மருத்துவர்கள்.

Categories

Tech |