தலைநகர் டமாஸ்கஸ் மீது நேற்றிரவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை முழுவதுமாக சிரியா ராணுவம் முறியடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிரியாவில் ஈரானிற்கு ஆதரவாக நடந்த போராளிகளை நோக்கி தன் முதல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட சில தினங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2011 ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் சிரியாவில் வெடித்தது. இந்த யுத்தத்தால் பாதிப்படைந்த நாட்டில் தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக ஈரானிய மற்றும் லெபனான் ஹெஸ்பொல்லா படைகள் மற்றும் சில அரசு துருப்புகள் தான் இருந்து வருகிறது.
மேலும் மேற்கத்திய நிபுணர்கள் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், சிரியாவில் ஈரானின் விரிவுபடுத்தப்பட்ட ராணுவ பலத்தை குறைத்து மதிப்பிட உட்படுத்தியுள்ளது என்று கருதுவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிரியா இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களை மிகுந்த யுக்திகளுடன் கையாண்டு முறியடித்து விட்டதாக தெரிவித்துள்ளது.