Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரவில் மதுபோதையில்… கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள்… மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!

திருப்பூர் மாவட்டத்தில் மதுபோதையில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொடிக்கம்பம் என்ற பகுதியில் நேற்று இரவு ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் கத்தியுடன் வளம் வந்து அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் அங்கிருந்த சிறு செடிகளை கத்தியால் வெட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து இளைஞர்களை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களிடம் கேள்வி கேட்ட போது, அவர்களையும்  கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இரண்டு இளைஞர்களை பிடித்து பலத்த அடி கொடுத்தனர்.மற்றவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

Categories

Tech |