Categories
மாநில செய்திகள்

இரவில் ரோட்டில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்…. திடீர் ஆய்வு….!!!

சாலைகள் அமைக்கும் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை பார்ப்பதற்காக நேற்று இரவு முதல்வர் முக ஸ்டாலின் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட வாரன் சாலை மற்றும் மகாலிங்கம் சாலை ஆகியவற்றில் புதிய சாலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்தில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை புதிய சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகின்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மழையின் காரணமாக சேதமடைந்த பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளை கணக்கெடுத்து புதிய சாலைகள் அமைப்பதற்கும் பணிகளை விரைவாக தொடங்கும் பணியில் குறிப்பிட்டவாறு சாலையின் தரம் உள்ளதா என்பதை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு தேனாம்பேட்டை மண்டலம்,வாரன் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அகழ்ந்தெடுக்கும் (Milling) பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மகாலிங்கம் சாலையில் தார்க்கலவையில் தாரின் சதவீதம் சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீர் தேங்காவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், ஆய்வு செய்தார்.

Categories

Tech |